ADDED : பிப் 26, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: பா.ம.க.,வை
சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தொகுதி மேம்பாட்டு
திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் செலவில் வீரக்கல்புதுார் டவுன்
பஞ்சாயத்து பருவன் தெருவில், ஆழ்துளை குழாய் கிணற்றுக்கு புது
மின்மோட்டார், சின்டெக்ஸ் தொட்டி அமைக்க, பூமிபூஜை விழா நேற்று
நடந்தது.
எம்.எல்.ஏ., சதாசிவம், பூஜை போட்டு பணியை தொடங்கிவைத்தார்.மாநில
இளைஞர் சங்க துணை செயலர் தமிழ்வாணன், வீரக்கல்புதுார் டவுன்
பஞ்சாயத்து, பா.ம.க., செயலர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர். தொடர்ந்து, மேச்சேரி, மூர்த்திப்பட்டியில், 5 லட்சம்
ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ., சதாசிவம்
தொடங்கிவைத்தார். மேச்சேரி ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
