ADDED : ஜூலை 14, 2025 07:18 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி. இவரது தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாயில், காடையாம்பட்டி, கரட்டுக்காட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
முன்னதாக காடையாம்பட்டி நகர செயலர் ஆனந்த்குமார் தலைமையில் கட்சியினர், இரு-சக்கர வாகனத்தில் பேரணியாக, எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ., மணி, கட்டுமானப்பணியை தொடங்கிவைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் பங்கேற்றனர்.
