/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து எம்.எல்.ஏ., மரியாதை
/
எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து எம்.எல்.ஏ., மரியாதை
எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து எம்.எல்.ஏ., மரியாதை
எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து எம்.எல்.ஏ., மரியாதை
ADDED : ஜன 20, 2025 07:15 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் அமானி கொண்டலாம்பட்டி, நாழிக்கல்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து, மூக்குத்திபாளையம் உள்ளிட்ட இடங்களில், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ஜெகநாதன் தலைமையில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அனைத்து இடங்களிலும், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, கட்சி கொடியேற்றி, இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.
அதேபோல் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர்., - அண்ணா சிலைகளுக்கு, எம்.எல்.ஏ., ராஜமுத்து மாலை அணிவித்து வணங்கினார். நிலவாரப்பட்டியில் வக்கீல் மணிகண்டன், மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார். திப்பம்பட்டி, குரால்நத்தம், தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஒன்றிய துணை செயலர் குணசீலன், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்னதம்பி, ஜெ., பேரவை செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.