ADDED : பிப் 12, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: தலைவாசல்,
நாவலுாரில், 30,000 லிட்டர் கொள்ளளவில், உயர்-மட்ட நீர் தொட்டி அமைக்க,
கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 லட்சம்
ரூபாய் ஒதுக்கப்பட்-டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்து,
பணியை தொடங்கிவைத்தார். ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராமசாமி, மாவட்ட
பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
