ADDED : ஜன 08, 2026 07:26 AM

அ நிறம் | அளவு
தாரமங்கலம்: தாரமங்கலம், கந்தசாமி கோவில் அருகே செயல்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் சிதிலமடைந்தது. இதனால் கிழக்கு பாவடி பள்ளி அறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிதிலமடைந்த கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்க, சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ., நிதியில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல், எம்.எல்.ஏ., நிதியில் கருக்குப்பட்டியில் நிழற்கூடம் கட்ட, 5 லட்சம் ரூபாய், அருணாசலம்புதுாரில், 'போர்வெல்' அமைக்க, 4.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. அதில், அ.தி.மு.க.,வின், சங்ககிரி தொகுதி, எம்.எல்.ஏ., சுந்தரராஜன், நேற்று பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
