ADDED : மார் 06, 2026 04:12 AM
மேட்டூர்: அ.தி.மு.க.,வின், மேட்டூர் நகர அலுவலகத்தில், நகர செயலர்கள், சார்பு அணி புது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் நகராட்சியின், 30 வார்டு செயலர்கள் அறிமுகம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இளங்கோவன் ஆலோசனை வழங்கி பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர், 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு வார்டு செயலர்கள் களப்பணி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.நகர செயலர் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, கொளத்துார், மேச்சேரி ஒன்றிய செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மேட்டூர் நகராட்சி, 7வது வார்டு கிளை அலுவலகத்தை, இளங்கோவன் திறந்து வைத்தார்.
