ADDED : ஜூன் 03, 2026 02:45 AM
அ நிறம் | அளவு
சேலம்:மொபைல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல், மணிவிழுந்தான் பகுதியை சேர்ந்தவர் அருண், 29. இவர், நேற்று சேலம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஜங்ஷனுக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல்போனை, திடீரென ஒருவர் திருடிக் கொண்டு தப்ப முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த மக்கள் உதவியுடன் அவரை பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி பகுதியை சேர்ந்த சாமுவேல், 19, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
