ADDED : டிச 15, 2025 06:34 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மத்திய சிறையில், சிறை சோதனை குழு-வினர் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்-கொண்டனர்.
அப்போது டவர் பிளாக், 2ல் அடைக்-கப்பட்டுள்ள கஞ்சா வழக்கு தண்டனை கைதி மீனாட்சிசுந்தரம், 23, திருட்டு வழக்கு கைதிகள் மாரிமுத்து, 27, தேவா, 29, ஆகியோரது அறையில், 2 மொபைல் போன்கள், 5 பேட்டரி, 1 சார்ஜர், ஒரு ஒயர் இருந்தன. அவற்றை பறி-முதல் செய்த குழுவினர், அதிகாரிகளிடம் ஒப்ப-டைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
