ADDED : ஏப் 02, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
சேலம், திருப்பத்துார், ஆம்பூரை சேர்ந்தவர் அன்வர்பாய் முல்தானி, 36. இவர், 2023ல் ஒரு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார். அவரது அறைக்கு சென்ற சிறை சோதனை குழுவினர், அவரது உடலை சோதனை செய்தனர். அப்போது ஆசனவாயிலில் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை கைப்பற்றி விசாரித்தனர்.
தொடர்ந்து அவர் தகவல்படி, 23வது அறையில் மறைத்து வைத்திருந்த சார்ஜர், சிம்கார்டு, இரு பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் ராஜேந்திரன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
