ADDED : நவ 17, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதி மனோஜ், 23, தினேஷ், 24, ஆகியோர் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சிறை சோதனை குழுவினர் வருவதை பார்த்து, அவர்கள் அறையில் இருந்த கழிப்பறையில், மொபைல் போனை வீசினர்.
உடனே சோதனை குழுவினர், மொபைல் போன்களை கைப்பற்றி, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரிக்கின்றனர்.
