ADDED : ஏப் 26, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி:-வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுாரில், போதிய மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை, மக்கள் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள்தோறும் சென்று, ஒரு பாத்திரத்தில் அனைத்து வீடுகளிலும் சாப்பாடு வாங்கினர். தொடர்ந்து,
அங்குள்ள கருப்பனார், மாயவன் சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். அங்குள்ள, 3 விதவையருக்கு பாத பூஜை செய்து, படைத்த சாப்பாட்டை, அவர்களுக்கு கொடுத்தனர். தொடர்ந்து விவசாயிகள், ஒப்பாரி வைத்து வழிபட்டனர். இதுபோன்று வழிபட்டால், மழை வரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
