நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அருகே கருப்பூர், மேட்டுப்பதி அம்மா கண்தோட்டம் பகு-தியை சேர்ந்தவர் ஜோதி, 50. இவர் ஜி.டி.பி., நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார். கடந்த, 15ல் கருப்பூர் மகளிர் குழுவில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயை பெற்று வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.
தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் பீரோவில் இருந்து, 2,500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று காலை வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி-ருந்த, 57 ஆயிரத்து 500 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரியவந்-தது.
இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, மேட்டுப்ப-தியை சேர்ந்த கைலாஷ், 19, என்பவரை கைது செய்தனர்.

