ADDED : அக் 31, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் நேற்று பயணியர் கூட்டம் அலைமோதியது. ஜவுளி, பட்டாசுகளை வாங்க, கிராம பகுதிகளில் இருந்து பலரும் ஓமலுாருக்கும், சேலத்துக்கும் சென்றதால், அப்பகுதியின் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக காணப்பட்டது.
இதனால் ஓமலுார், புளியம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காமலாபுரம், பெரமெச்சூர் ஆகிய பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே மூங்கில் குச்சிகளால் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, அதன் மூலம் போலீசார், போக்குவரத்து சீரமைத்தல், கூட்டத்தை கண்காணித்தல் பணிகளை மேற்கொண்டனர். போலீசாருடன் ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபட்டனர்.