ADDED : ஜூன் 17, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டியில்
அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அருகருகே
உள்ளன. அங்கு சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு, நோயாளிகள்,
கர்ப்பிணியர், மாணவர்களை நீண்ட நாட்களாகவே அச்சுறுத்தி
வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி,
காலைக்கதிர் நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்நிலையில்
நேற்று, பள்ளியில் ஒரு மாணவரை, குரங்கு கடித்தது. அவருக்கு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. குரங்கால், மாணவ,
மாணவியர் அச்சத்துடன் நடமாடும் சூழல் உள்ளது. குரங்கை பிடித்து,
வனப்பகுதியில் விட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
மக்கள் வலியுறுத்தினர்.
