ADDED : நவ 15, 2026 01:01 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கை, 90 முதல், 100 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோ, 180 ரூபாயாக விலை உயர்ந்தது.
வெளிமார்க்கெட்டில் கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையானது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: முருங்கைக்காய் சீசன் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், அதன் வரத்து குறையத்-தொடங்கி உள்ளது. ஆனால் திருமணம் உள்ளிட்ட சுப விசே-ஷங்கள் அதிகளவில் நடந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், தற்போது, 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. முட்-டைக்கோஸ், முள்ளங்கி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறியும், கிலோவுக்கு, 5 முதல் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு
அவர்கள் கூறினர்.
