ADDED : ஆக 17, 2026 03:10 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, சந்தியூர் பிரிவில் இருந்து அம்-மாபாளையம், பாரப்பட்டி, மேச்சேரியம்பாளையம், பசுவநத்தம்-பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தார்ச்சாலை செல்கிறது. அதன் வழியே ஏராளமான கல்குவாரி லாரிகள், 24 மணி நேரமும் இயக்-கப்படுகின்றன. அந்த லாரிகளின் அதிக பாரத்தால், சாலைகள் சிதைந்து பெயர்ந்து, புழுதி பறக்கும் மண் பாதையாக மாறி சீர-ழிந்துள்ளது.
குறிப்பாக வளைவான பகுதியில் சாலை படுமோசமாக சீரழிந்-துள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இரவில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்-துக்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
