/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாக்கடை சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாக்கடை சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 16, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு, கரிகாலன் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்தெருவில் சாக்கடை மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் மேற்பகுதி பெயர்ந்துள்ளது.
இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லை, சுகாதார சீர்கேட்டில் அப்பகுதி மக்கள், சிக்கித்தவிக்கின்றனர். அந்த வழியே இருசக்கர வாகனங்களில் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்துார் நகராட்சி நிர்வாகம், உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

