/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைக்கிராம சிறுமி கர்ப்பம் இளைஞருக்கு 'காப்பு'
/
மலைக்கிராம சிறுமி கர்ப்பம் இளைஞருக்கு 'காப்பு'
ADDED : நவ 02, 2025 12:59 AM
ஏற்காடு, ஏற்காடு மலைக்கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் கல்லுாரியில் முதலாண்டு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்பட்டு, பெற்றோர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தனர். அதில் கர்ப்பம் உறுதியானது. உடனே மருத்துவமனை சார்பில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார், சிறுமியிடம் விசாரித்ததில், ஏற்காடு, நாகலுார், எஸ்.டி., நகரை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ், 20, சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியது தெரிந்தது. தொடர்ந்து கொண்டலாம்
பட்டி மகளிர் போலீசார், விக்னேஷ் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின் ஏற்காடு போலீசார் விக்னேஷை பிடித்து, கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அங்கு, விக்னேஷை, போலீசார் கைது செய்தனர்.

