ADDED : மார் 05, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: தேவூர் டவுன் பஞ்சாயத்தில், தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தில், தேவூர், அம்மாபாளையம் சாலை முதல் வாய்க்கால் கரை; கள்ளியங்காடு, வட்ட
பரப்பான்காடு, காணியாளம்பட்டி செல்லி யாண்டி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை என, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து, சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலர் சுப்பிரமணி, தேவூர் பேரூர் செயலர் முருகன், செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
