தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பல அடுக்கு வாகன நிறுத்தம் வணிக பயன்பாட்டுக்கு மாற்ற உத்தரவு

பல அடுக்கு வாகன நிறுத்தம் வணிக பயன்பாட்டுக்கு மாற்ற உத்தரவு

பல அடுக்கு வாகன நிறுத்தம் வணிக பயன்பாட்டுக்கு மாற்ற உத்தரவு


ADDED : அக் 02, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகரின் மையப்பகுதிகளில் நிலவும் போக்குவரத்து மற்றும் வாகன நெரிசலை குறைக்க, சீர்மிகு நகர திட்டத்தில் பல்-வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஆனந்தா பாலத்தில், 12.34 கோடி ரூபாய் மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நிலத்தடி தளம், தரைத்-தளம் மற்றும் 4 மேல் தளங்களை கொண்டது.கடைவீதி பகுதிகளுக்கு வரும் மக்கள், பாதுகாப்பாக அங்கு வாகனங்களை நிறுத்த வசதியாக உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில், 1,308 இருசக்கர வாகனங்கள், 35 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.

ஆனால் கடைவீதிக்கு வருபவர்கள், அங்கு வாகனம் நிறுத்தி-னாலும் நீண்ட துாரம் நடக்க வேண்டியுள்ளது. பலரும் அங்கு வாகனங்களை நிறுத்த விரும்பாவில்லை.

இந்நிலையில் அங்கு மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம், நேற்று ஆய்வு செய்தார். அப்போது காலியாக உள்ள, 2, 3ம் தளங்களை, வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த நடவ-டிக்கை எடுக்கும்படி, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us