/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.47 லட்சத்தில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு கலெக்டருக்கு நகராட்சி பொறியாளர் அறிக்கை
/
ரூ.47 லட்சத்தில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு கலெக்டருக்கு நகராட்சி பொறியாளர் அறிக்கை
ரூ.47 லட்சத்தில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு கலெக்டருக்கு நகராட்சி பொறியாளர் அறிக்கை
ரூ.47 லட்சத்தில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு கலெக்டருக்கு நகராட்சி பொறியாளர் அறிக்கை
ADDED : மே 25, 2024 02:13 AM
ஆத்துார்: 'காலைக்கதிர்' செய்தியால் தரைப்பாலத்தை ஒட்டி கொட்டப்பட்டிருந்த குப்பை அகற்றப்பட்டது. 47 லட்சம் ரூபாயில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்த நகராட்சி பொறியாளர், அதன் அறிக்கையை, சேலம் கலெக்டருக்கு அனுப்பினார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு வழியே பைத்துார் மலையில் உற்பத்தியாகும் ஓடை செல்கிறது. அந்த ஓடை, வசிஷ்ட நதியுடன் இணைகிறது. ஓடை குறுக்கே, பாரதியார் தெரு, கிரைன்பஜார் பகுதிகளை இணைக்கும்படி கட்டப்பட்ட தரைப்
பாலத்தின் ஒரு பகுதி, 10 ஆண்டுக்கு முன் உடைந்து தற்போது ஒத்தையடி பாதையாக மாறியுள்ளது. இரு நாட்களுக்கு முன், அந்த வழியே வந்த சிறுவன், ஓடையில் விழுந்து
உயிரிழந்தான்.
அங்கு புதிதாக பாலம் கட்ட, பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என, மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று, ஓடையில் கொட்டப்பட்டிருந்த குப்பை, பல்வேறு கழிவை, நகராட்சி பணியாளர்கள், 'பொக்லைன்' மூலம் அகற்றினர்.
தொடர்ந்து ஆத்துார் நகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு அனுப்பிய அறிக்கை:
ஆத்துார், பாரதியார் தெருவில் உள்ள தரைப்பாலம் குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை குறுக்கே, 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலம் சேதம் அடைந்துள்ளது.
அந்த பாலத்தை, நகராட்சி மூலம் சீரமைக்க, சிறப்பு சாலைகள் திட்டத்தில், 2020 - 21ல், மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி பற்றாக்குறையால் பணி மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. மழை முன்னெச்சரிக்கை பணியாக, பாலத்தின் அடியில் மழைநீர் தடையின்றி செல்லும்படி, பொக்லைன் மூலம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது நகராட்சி மூலம் அந்த பாலத்தை இடித்து புதுப்பிக்க, 47 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதி பெற்று பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

