ADDED : மார் 17, 2026 04:23 AM
ஆத்துார்:ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒப்பந்த முறையில், 140 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை, 6:00 மணி முதல், பணிக்கு செல்லாமல், நக-ராட்சி அண்ணா கலையரங்கம் முன், துாய்மை பணியாளர்கள் தர்-ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆத்துார் நகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியா-ளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'துாய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்குவதில்லை. பிடித்தம் செய்யும் தொகையை, பி.எப்., கணக்கு மற்றும் காப்பீடுகளிலும் செலுத்துவதில்லை' என, கூறினர். நகராட்சி அலுவலர்கள், 'சம்-மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் எடுத்துரைத்து, உரிய தீர்வு காணப்படும்' என, உறுதியளித்தனர். அதன்பின், 9:00 மணிய-ளவில், துாய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.மது விற்ற பெண்ணுக்கு காப்பு
சேலம், மார்ச் 17
ரெட்டியூர் பகுதியில் சட்ட விரோதமாக, டாஸ்மாக் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து நேற்று ரெட்டியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குள்ளகவுண்டர் தெருவில் உள்ள அலமேலு, 57, என்பவர் வீட்டில், மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்ததால் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
