/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்தமிழ் முருகன் மாநாடு; பக்தர்களுக்கு அழைப்பு
/
முத்தமிழ் முருகன் மாநாடு; பக்தர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 22, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும், 24, 25ல், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்க உள்ளது.
அதில் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, மாநாடு குறித்த விளம்பர பேனர், சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் மாநாட்டில் பக்தி பரவசமூட்டும் கருத்தரங்கம், ஆய்வரங்கம், காட்சியரங்கு, கலை நிகழ்ச்சி, '3டி' திரையரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.