ADDED : மே 29, 2026 02:58 AM

அ நிறம் | அளவு
ஏற்காடு; ஏற்காடு, லாங்கில்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 12ல் கொடியேற்-றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, அம்ம-னுக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்-கப்பட்டது.
தொடர்ந்து இரவு, 8:40 மணிக்கு சத்தா-பரண ஊர்வலம் நடந்தது. கோவிலில் தொடங்-கிய ஊர்வலம், லாங்கில்பேட்டை, ஏற்காடு டவுன், பஸ் ஸ்டாண்ட் வழியே ஜெரீனாகாடு பெரிய மாரியம்மன் கோவில் வரை சென்று, மீண்டும் அதே வழியில் கோவிலை அடைந்தது. வழிநெடுக ஏராளமான பக்தர்கள், அம்மனை வழி-பட்டனர்.
