/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் புகுந்த மர்ம நபர்கள்; மாணவிக்கு பாலியல் தொந்தரவு
/
மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் புகுந்த மர்ம நபர்கள்; மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் புகுந்த மர்ம நபர்கள்; மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் புகுந்த மர்ம நபர்கள்; மாணவிக்கு பாலியல் தொந்தரவு
ADDED : அக் 22, 2024 07:28 AM
ஆத்துார்: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் புகுந்து, மாண-விக்கு பாலியல்
தொந்தரவு அளித்த மர்ம நபர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க கோரி, ஆத்துாரில் பள்ளியை
முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி உள்ளது. 2,232
மாணவிகள் படிக்கின்றனர். சில நாட்-களுக்கு முன்பு, பள்ளி சுற்றுச்சுவர் ஏறி வந்த மர்ம
நபர்கள், கழிப்-பறைக்கு சென்ற மாணவி ஒருவரை வாயில் துணி வைத்து, பாலியல்
தொந்தரவு செய்ததாக தகவல் வெளியானது. இதைய-றிந்த மற்ற மாணவிகளின்
பெற்றோர், 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், 12:30 மணியளவில் பள்ளியை
முற்றுகையிட்டு, பாலியல் தொந்தரவு அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும். மற்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என, போராட்டத்தில்
ஈடுபட்டனர். ஆத்துார் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் மலர்கொடி, டவுன்
இன்ஸ்பெக்டர் அழகுராணி உள்ளிட்ட போலீசார், 'மாணவி மீதான பாலியல் தொந்த-ரவு குறித்து, 'சிசிடிவி'
கேமரா மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்து, அது போன்ற புகார் இருந்தால்
நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், மாண-வியின் பெற்றோர் புகார் அளிக்காத
நிலையில், தகவலறிந்து போலீசார் விசாரிக்கிறோம். பள்ளி சுற்றுச்சுவர் உயரம்
செய்தல், கழிப்பறை சுத்தம் போன்றவை குறித்து, தலைமையாசிரியரிடம் கூறி,
கலெக்டர் மூலம் இதற்கான தீர்வு காணப்படும்' என்றனர். அதற்கு பெற்றோர், 'மர்ம நபர்கள்
மீது நடவடிக்கை எடுப்ப-துடன், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு மாதத்தில் தீர்வு காணவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்' என்றனர். உதவி தலைமை ஆசிரியை ஈஸ்வரி கூறுகையில்,''தலைமை ஆசி-ரியர் சேலம்
சென்றுள்ளார். முதன்மை கல்வி அலுவலரிடமும், புகார் குறித்து தெரிவித்துள்ளோம்.
பின்புற சுவர் பகுதியில் பாது-காப்பு, கழிப்பறை சுத்தம் செய்தல் பணிகள்
மேற்கொள்ளப்-படும்,'' என்றார். அதன்பின், 2:10 மணியளவில் அனைவரும் கலைந்து
சென்றனர்.இதுபற்றி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாலினி கூறு-கையில், ''கழிப்பறை
பாதுகாப்பாக இல்லை என, இரு ஆண்டுக-ளாக தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியும்
நடவடிக்கை இல்லை. பல மாணவிகள், கழிப்பறையை பயன்படுத்துவ-தில்லை.
இங்குள்ள கழிப்பறை பயன்படுத்திய பின், எனது பிள்-ளைக்கு சிறுநீரக பிரச்னை
ஏற்பட்டு ஆண்டுக்கு, 20 ஆயிரம் செலவு செய்து வருகிறேன். பள்ளி பின்புற பகுதியில்
'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும்,'' என்றார்.