ADDED : அக் 14, 2026 05:23 AM

சேலம்:இந்திய
அஞ்சல்துறை சார்பில், கடந்த, 9ல் தொடங்கிய, தேசிய அஞ்சல் வாரவிழா,
நாளை நிறைவு பெறுகிறது. 6ம் நாளான இன்று, அஞ்சல் மற்றும் பார்சல் சேவை,
குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் கவனம்
செலுத்தப்படும். வாடிக்கையாளர் சேவை அனுபவங்கள், வணிக நிறுவனங்கள்
உடனான கலந்துரையாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், விரிவான
அஞ்சல் மற்றும் பார்சல் வலையமைப்பு
எடுத்துரைக்கப்படும்.
நாளை,
ஊழியர், வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப வினாடி - வினா உள்ளிட்ட
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஒரே அஞ்சல் வலையமைப்பு
- எண்ணற்ற வாய்ப்புகள்' எனும் கருப்பொருளை முன்னிறுத்தி, நடை, ஓட்ட
நிகழ்ச்சி நடக்கிறது. அதன்மூலம் அஞ்சல் சேவைகள் மக்களுக்கு
எடுத்துரைக்கப்படும்.
இதில்,
மக்கள், மாணவர்கள், வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்து தரப்பினரும்
பங்கேற்கலாம் என, சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல்
கண்காணிப்பாளர் கோபால் தெரிவித்துள்ளார்.
