ADDED : டிச 08, 2025 04:40 AM

சேலம்: சேலம், விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், கதிரியக்கவியல் துறை, கதிரியக்கவியல் தொழில்நுட்ப பிரிவு சங்கத்துடன் இணைந்து, தேசிய அளவில் கருத்தரங்கை, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடத்தின. கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, பல்கலை பதிவாளர் நாகப்பன் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக, கதிரியக்கவியல் தொழில்நுட்ப சங்க நிறுவனர் விக்டர் ராகேஷ், துணைத்தலைவர் சிவப்பிரகாஷ், பொதுச்செயலர் பரத் ஆகாஷ் பங்கேற்றனர்.சிறப்பு பேச்சாளர்களாக, ஹைதராபாதின் மல்லரெட்டி பல்-கலை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை சேர்ந்த உதவி பேராசி-ரியை ரேவதி; சென்னை, எஸ்.ஆர்.எம்., அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை பேராசிரியர் விக்டர் ராகேஷ்; ஹரியானா புஜி பிலிம் நிறுவன செயலி நிபுணர் தீக்ஷா குக்ரீத்தி, பெங்களூரு சீமென்ஸ் சுகாதார ஹெல்த்னீயர்ஸின் ஆராய்ச்சி கதிரியக்கவிய-லாளர் அருள்; ஹைதராபாதின் பிலிப்ஸ் இந்தியா நிறுவன, மருத்-துவ பயன்பாட்டு நிபுணர் சாத்விக்; ஆச்சாரியா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி உதவி பேராசிரியர் சார்லி டேனியல், பல்வேறு புது தொழில்நுட்பங்கள் சார்ந்து பேசினர்.
புஜி பிலிம் நிறுவனத்தை சேர்ந்த, மூத்த செயலி நிபுணர் இந்து, மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்தார். மாணவர்க-ளுக்கு பட விளக்க காட்சி, ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி கதிரி-யக்கவியல் பிரிவு பொறுப்பாளர் கலைவாணி, உதவி பேராசிரி-யர்கள் ஆண்டனி ரூபன், அல்போன்ஸ், காட்ஸன், தங்க குமரன், கிருத்திகா செய்திருந்தனர்.

