/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் தேசிய மகளிர் தினம் கொண்டாட்டம்
/
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் தேசிய மகளிர் தினம் கொண்டாட்டம்
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் தேசிய மகளிர் தினம் கொண்டாட்டம்
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் தேசிய மகளிர் தினம் கொண்டாட்டம்
ADDED : மார் 12, 2024 04:01 AM
ராசிபுரம்,: ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில், தேசிய மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷனின் நிர்வாகக்குழு உறுப்பினர் அம்மணி கந்தசாமி தலைமை வகித்தார். தாளாளர் கந்தசாமி, செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் ராகுல், நிர்வாகக்குழு உறுப்பினர் உமாராணி குணசேகரன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் அரசு மருத்துவமனையின், ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் நீலாம்பாள், ஆர்.புதுப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியின், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சரஸ்வதி, சேலம் கனரா வங்கி உதவி மேலாளர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், மாணவியரக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், கோலம், வினாடி - வினா, சமையல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர் மாதேஸ்வரன், வேணுகோபால், டீன் சுதந்திர வனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.