/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடை கல்லுாரியில் தேசிய பயிலரங்கம ்
/
கால்நடை கல்லுாரியில் தேசிய பயிலரங்கம ்
ADDED : டிச 13, 2024 01:44 AM
கால்நடை கல்லுாரியில்
தேசிய பயிலரங்கம ்
ஆத்துார், டிச. 13-
தலைவாசல், வி.கூட்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறை சார்பில், மயக்க மருந்து, வலி மேலாண்மை, நுண்ணறிவு செயல்பாடுகள் குறித்து தேசிய பயிலரங்கம் நேற்று நடந்தது.டீன் இளங்கோ தலைமை வகித்தார். அதில், சிறு, பெரு பிராணிகள், வன விலங்குகளுக்கு நவீன தொழில்நுட்பம், வலி மேலாண்மை, வலியை குறைக்கும் வழிகள் குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை நடைமுறைகள், மருத்துவ சிகிச்சை, வலி தீர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
நாமக்கல் கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை தலைவர் ராஜேந்திரன், தலைவாசல் கால்நடை மருத்துவ கல்லுாரி தலைவர் செந்தில்குமார், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில பேராசிரியர்கள், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கால்நடை மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் பங்கேற்றனர்.