/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிறிஸ்து பிறப்பு நற்செய்தி ஊர்வலம்
/
கிறிஸ்து பிறப்பு நற்செய்தி ஊர்வலம்
ADDED : டிச 09, 2024 07:21 AM
சேலம்: சேலம் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து திருச்சபைகள் சார்பில் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி ஊர்வலம் நேற்று சேலத்தில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம், கலெக்டர் அலுவலகம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியே சென்று, சூசன்னம்மாள் திருமண மண்டபத்தை அடைந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பின் பாடல்களை பாடியபடி சென்றனர். அத்துடன் சிலர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பங்கேற்றனர். இதில் சங்க தலைவர் ஜஸ்டின்ராஜ், செயலர் விமல் மேசஸ், கத்தோலிக்க திருச்சபைகள் சார்பில் மூவேந்தர் அருட்பணி மைய இயக்குனர் கி ேஷார், சி.எஸ்.ஐ., திருச்சபைகள் சார்பில் பேராயர் எழில்ராபட் கெவின், ஒருங்கிணைப்பாளர் ஜெகன், போதகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.