/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கில் விழிப்புணர்வு பேரணி சேலம் வந்த கடற்படை வீரர்கள்
/
பைக்கில் விழிப்புணர்வு பேரணி சேலம் வந்த கடற்படை வீரர்கள்
பைக்கில் விழிப்புணர்வு பேரணி சேலம் வந்த கடற்படை வீரர்கள்
பைக்கில் விழிப்புணர்வு பேரணி சேலம் வந்த கடற்படை வீரர்கள்
ADDED : டிச 16, 2024 03:33 AM
ஓமலுார்: சென்னையில் கடந்த, 4ல், இந்திய கடற்படை தினம் கொண்டா-டப்பட்டது.
தொடர்ந்து கடற்படையின் பாதுகாப்பு பணி, அதில் ஆண்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கேப்டன் ரமணி தலைமையில், 13 வீரர்கள், 10 பைக்குகளில், 2,500 கி.மீ., விழிப்புணர்வு பேர-ணியை தொடங்கினர்.
அங்கிருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், ராமநாத-புரம், திருநெல்வேலி, மதுரை, கொடைக்கானல், ஊட்டி, ஈரோ-டுக்கு பின் நேற்று சேலம் வந்து, ஓமலுார் வழியே கிருஷ்ணகி-ரியை நோக்கி புறப்பட்டனர். சேலம் வந்த வீரர்களுக்கு, 'சேலம் பைக்கர்ஸ் கிளப்' தலைவர் இனியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.இதுகுறித்து கேப்டன் ரமணி கூறுகையில், ''கடற்படை தினத்-தன்று விழிப்புணர்வு பைக் பேரணி தொடங்கியது. வழியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு கடற்படை குறித்து அதில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. கடற்-படையின் முன்னாள் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறோம். டிச., 16ல்(நாளை) சென்னையில் பேரணி முடிகிறது,'' என்றார்.

