ADDED : ஜூன் 17, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு:ஏற்காடு தழைச்சோலை, பசிப்பள்ளம் மலைக்கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் முருகன், 37. விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று
முன்தினம் இரவு, தலை, இரு கால்கள், உடலில் வெட்டு காயம் ஏற்பட்டு, வீடு
அருகே கிடந்தார். உறவினர் ஆண்டி பார்த்து, அவரை மீட்டு ஏற்காடு அரசு
மருத்துவமனையில் சேர்த்தார்.
ஏற்காடு போலீசார், முருகனிடம்
விசாரித்ததில் அவருக்கும், அவரது அண்ணன் செல்வகுமாருக்கும்,
நிலப்பிரச்னையில் தகராறு ஏற்பட்டதும், அதில் செல்வகுமார், 45,
அவரது மகன்கள் அமர்நாத், 26, தினேஷ், 23, சேர்ந்து கத்தியால்
குத்தியதாக தெரிவித்தார்.
இதனால் வழக்குப்பதிவு செய்த போலீசார், அமர்நாத், தினேஷ் ஆகியோரை கைது செய்து, செல்வகுமாரை தேடுகின்றனர்.
