/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை, வாட்ச் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை, வாட்ச் வழங்கல்
ADDED : அக் 16, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், தீபாவளியை முன்னிட்டு, மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒழுக்கத்தில் சிறந்த, ஆதரவற்ற குழந்தைகள், பணியாளர்கள் என, 100 பேருக்கு, தலைமை ஆசிரியர் ஜெயகுமார், புத்தாடைகளை இலவசமாக நேற்று வழங்கினார்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, மேட்டூர் வாட்ச் கடை உரிமையாளர் பாஷாஜான், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2023 - 24, 2024 - 25ல், பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் நிஷாந்த், நத்யாஸ்ரீ, தர்ஷன், சுபாஷ் ஆகியோருக்கு, வாட்சுகளை இலவசமாக வழங்கினார். தவிர நகராட்சி சுகாதார பணியாளர்கள், 5 பேருக்கு புத்தாடை வழங்கினார்.