ADDED : ஏப் 10, 2026 02:48 AM
சேலம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச், 3 முதல், 26 வரை நடந்-தது. 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். அதன் விடைத்தாள் மதிப்பீடு பணி, 89 மையங்களில் நேற்று முதல் தொடங்கியது.
கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டபோது, மறு மதிப்பீட்டில், மதிப்பெண் வேறுபாடுகள் அதிகளவில் இருந்தன. இதை குறைக்க, மதிப்பீடு செய்வதில் குளறுபடி இருப்பின், சம்-பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 100 சதவீத மதிப்பெண் வாங்கிய விடைத்-தாள்களை, முகாம் அலுவலர் மீண்டும் கூர்ந்தாய்வு செய்து கையொப்பமிட, தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா உத்தரவிட்-டுள்ளார்.
மேலும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட முழு மதிப்-பெண்கள் பெற்ற தேர்வர்களின் பட்டியலை பதிவிறக்கி, அனைத்து விடைத்தாள்களும் மறு ஆய்வு செய்யப்பட்டுள்-ளதை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட முகாம் அலுவலர்க-ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
