தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பை கழிவை அகற்ற புது திட்டத்துக்கு உத்தரவு

குப்பை கழிவை அகற்ற புது திட்டத்துக்கு உத்தரவு

குப்பை கழிவை அகற்ற புது திட்டத்துக்கு உத்தரவு


ADDED : டிச 28, 2025 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை, கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய நர்சரி, அம்மா ஜிம், அண்ணா பூங்கா, சரபங்கா குடில், ஏற்காடு இல்ல கட்டடங்களை பார்வையிட்டார். ஒன்றிய அலுவலகத்தில் குப்பை மறுசுழற்சி மையத்தை சீர்செய்வது குறித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். குப்பை கழிவை அப்புறப்படுத்த, புது திட்டம் தயாரித்து கொடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் பொன்மணி, ஒன்றிய கமிஷனர் சிவகுமார், பி.டி.ஓ., முருகன் உடனிருந்தனர்.

இதனிடையே பேடியிடம், அ.தி.மு.க.,வின், ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ., சித்ரா சந்தித்து, மனு கொடுத்தார். அதில், 'கரடியூர் முதல் சொரக்காப்பட்டி வரையான சாலையை விரைவில் அமைத்து கொடுக்க வேண்டும். வெள்ளக்கடையில் அங்கன்வாடி கட்டடம் தேவை. ஏற்காடு மக்களுக்கு குடிநீர், சாலை, உயர்மின் கோபுரங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்' என கூறியிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us