ADDED : ஏப் 21, 2025 07:15 AM
பைக் திருடியவருக்கு 'காப்பு'
சேலம்: இடைப்பாடி, இளவம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினவேல், 34. இவர் கடந்த, 17ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்க்க, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்து, அங்குள்ள சமையல் கூடம் அருகே நிறுத்திச்சென்றார். சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்தபோது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி, மருத்துவமனை போலீசார் விசாரித்து ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம், 29, என்பவரை கைது செய்து பைக்கை மீட்டனர்.
கஞ்சா விற்றவர் சிக்கினார்
சேலம்: இரும்பாலை போலீசார், நேற்று முன்தினம் செம்மண் திட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய வாலிபரை படித்து விசாரித்தபோது, பெருமாம்பட்டியை சேர்ந்த சரத்குமார், 26, என்பதும், தடைசெய்யப்பட்ட கஞ்சாவை பள்ளி மாணவர்களுக்கு விற்றதும் தெரிந்தது. இதனால் சரத்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காப்பர் ஒயர் திருடியவர் கைது
ஓமலுார்: மேட்டூர், வெள்ளாறை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 28. காடையைாம்பட்டி, நடுப்பட்டியில் தனியார் புளு மெட்டல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 11ல், கிரஷரில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போது, 62 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போனது. இதுகுறித்து கோகுல்ராஜ் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்ததில், நடுப்பட்டியைச் சேர்ந்த நவீன், 23, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று கைது செய்த போலீசார், ஒயரை மீட்டனர்.
த.வெ.க., அலுவலகம் திறப்பு
சேலம்: சேலம், களரம்பட்டி ஆட்டோ ஸ்டேண்ட் அருகே, த.வெ.க., சார்பில் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. கோட்ட செயலர் ஆண்டனி தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

