தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேடு! முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேடு! முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேடு! முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்


ADDED : ஜூலை 04, 2014 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2014 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகராட்சியில், விதிமுறைக்கு புறம்பாக கட்டிட அனுமதி வழங்குவது அதிகரித்து வருகிறது. சென்னை, போரூர் விபத்தை தொடர்ந்து, மாநகராட்சியில், கட்டிட அனுமதி வழங்குவது முறைப்படுத்தப்படுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகர பகுதிக்குள் ஒருவர் குடியிருப்பு அல்லது வணிக நிறுவன கட்டிடம் கட்ட வேண்டுமானால், மாநகராட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமம் (எல்.பி.ஏ.,) அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். மாநகராட்சியில், குடியிருப்பு வீடாக இருக்கும் பட்சத்தில், 4,000 சதுர அடி வரையிலும், வணிக கட்டிடமாக இருந்தால், 2,000 சதுர அடி வரையிலும், மாநகராட்சி கமிஷனர் கட்டிட அனுமதி வழங்கலாம். உள்ளூர் திட்ட குழுமம், 26 ஆயிரத்து, 500 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கலாம். சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக, கட்டிட அனுமதி வழங்குவதில், அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், விதிமுறைக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட, கட்டிட அனுமதி பெறாத, 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில், நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.அனுமதி பெறாமல், கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க தயாராக இருக்கும் மாநகராட்சி நிர்வாகம், கட்டிடம் கட்டப்படும் போதே, முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா, என்பது குறித்து ஆய்வு நடத்துவதில்லை.

மாநகராட்சி அதிகாரிகள், பண மழையில் நனைவது தான் முறைகேடான கட்டிட அனுமதிக்கு காரணமாகும். உள்ளூர் திட்ட குழுமத்தை பொறுத்தவரை, சேலத்தில் இருந்து, கிழக்கில் மேட்டுப்பட்டி வரையிலும், தெற்கே இளம்பிள்ளை வரையிலும், மேற்கில் ஓமலூர், தாரமங்கலம் வரையிலும், வடக்கில் ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி பகுதி முழுவதில் இருந்து வரும் விண்ணப்பங்கள் குறித்து பரிசீலனை செய்து, ஆய்வு பணிக்கு பிறகு, கட்டிட அனுமதி பெற்று தர வேண்டும். ஜங்ஷன் பகுதியில் உள்ள உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில், குறைந்தப்பட்சம், 40 பேர் பணியாற்றினால் மட்டுமே, கட்டிட அனுமதி கேட்டு வரும் விண்ணப்பங்கள் மீது, அவ்வப்போது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், தற்போது அலுவலக உதவியாளரையும் சேர்த்து, 11 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதிலும், கட்டிட கண்காணிப்பாளர்களாக, மூன்று பேர் தான் பணியாற்றி வருகின்றனர். இதில், யாராவது விடுப்பில் சென்றால், பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். ஊழியர்கள் பற்றாக்குறையால், உள்ளூர் திட்ட குழுமத்துக்கு அனுமதி கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்படுவதோடு, இந்த பகுதி முழுவதிலும், அவர்களால் முழுமையான அளவில், ஆய்வு பணி மேற்கொள்ள முடிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விதிமுறைக்கு புறம்பாக அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை போல, பல அடுக்கு உயரமாக, 10க்கும் மேற்பட்ட வீடுகளை பலர் கட்டியுள்ளனர். ஆனால், அதற்கான அனுமதி பெறுவதில், சதுர அடியை குறைத்து காட்டியும், விதிமுறைக்கு புறம்பாக, இட வசதிகளை ஏற்படுத்தாமலும், முறைகேடான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை போரூர் அருகே ஏற்பட்ட கட்டிட விபத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாநகராட்சியில், கட்டிட அனுமதி குறித்த காலம், காலமாக பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. சம்மந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்ட குழுமம் கவனமாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us