இந்திய சுதந்திர போராட்ட வீரர் கே.டி.பால் நினைவு தினம்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கே.டி.பால் நினைவு தினம்
ADDED : ஏப் 12, 2017 06:49 AM
சேலம்: இந்திய சுதந்திர போராட்ட வீரர் கே.டி.பால், 86வது நினைவு தினம், சேலத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சேலம் வரலாற்று சங்கம் சார்பில், நான்குரோடு, பெரமனூர், கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ள கே.டி.பால் மற்றும் அவரது மனைவி கனகம்மாள் பால் ஆகியோரின் கல்லறைகள் சுத்தம் செய்து, மலர் தூவி, பிரார்த்தனை செய்யப்பட்டது. லண்டனில் நடந்த முதல் வட்டமேசை மாநாட்டில், இந்திய கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டு, சிறுபான்மையினரின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுத்தவர். அகில இந்திய ஒய்.எம்.சி.ஏ.,அமைப்பின் தேசிய பொதுச் செயலர் பதவி உள்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். குறிப்பாக, சி.எஸ்.ஐ., என அழைக்கப்படும் கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கியத்துக்கு கே.டி.பால் வித்திட்டவர் என்பதை, அவரது நினைவு நாளில், எடுத்து கூறப்பட்டது. சங்க தலைவர் இம்மானுவேல் ஜெயசிங், பொதுச்செயலர் பர்னபாஸ், ஞானதாஸ், அர்த்தனாரி, பேராசிரியர் கோவிந்தராஜ், பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
