தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கிராமங்களில் மர்ம காய்ச்சல் வீடுகளில் முடங்கிய மக்கள்

கிராமங்களில் மர்ம காய்ச்சல் வீடுகளில் முடங்கிய மக்கள்

கிராமங்களில் மர்ம காய்ச்சல் வீடுகளில் முடங்கிய மக்கள்


ADDED : அக் 17, 2013 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2013 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்வராயன் மலை, மேல்நாடு பஞ்சாயத்தில், மர்ம காய்ச்சலால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெத்தநாயக்கன்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட கல்வராயன் மலையில், மேல்நாடு, கீழ்நாடு, வடக்கு நாடு, தெற்கு நாடு பஞ்சாயத்துகளில், 120 குக்கிராமங்கள் உள்ளன. பெரிய கல்வராயன் மலை, மேல்நாடு பஞ்சாயத்து, கலக்காம்பாடி, தாழ்வெள்ளம், மேலூர், பெரண்டூர், முரசப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

முரசம்பட்டி கிராமத்தில், லட்சுமணன், 30, செல்வி, 25, கனகராஜ், 23, பவளக்கொடி, 55, ராமசாமி, 40 உள்பட, 20க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தும்பல், கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்று வருகின்றனர்.

மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள மேல்நாடு பஞ்சாயத்தில், சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us