தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்

கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்

கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்


ADDED : ஜன 23, 2014 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2014 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில், பசும்புல் தீவனத்தை வெட்டும் இயந்திரம், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவங்கியது.

சேலம் மாவட்டத்தில் கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களும், சாமந்தி, சம்பங்கி, அரளி, மல்லிகை போன்ற பூக்கள் பயிரிடும் விவசாயிகளும் அதிகம் உள்ளனர். தவிர, பெரும்பாலான விவசாயிகள் எருமை, பசு மாடுகள், ஆடுகளை வளர்க்கின்றனர். பருவமழை தவறியதால், கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் கடந்தாண்டு, சேலம் மாவட்ட விவசாயிகள் அவதிப்பட்டனர். இந்தாண்டும் அதே நிலை தான் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும், கால்நடைத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவபிரகாசம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு தீவனமாக பசும்புல் கொடுக்கின்றனர். தீவன புற்கள், ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியவை. இவைகளை மாடுகளுக்கு தீவனமாக தந்தால், புற்களை அப்படியே சாப்பிட சிரமப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக, கோவையில் தயாரிக்கப்பட்ட பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்துக்கு இந்தாண்டுக்குள், 450 பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரங்கள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 100 இயந்திரங்கள் வந்துள்ளன. இந்த இயந்திரங்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது.

பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரத்தில், ஐந்தடி, ஏழடி உயர தீவனப் பயிர்களை போட்டு விட வேண்டும். அந்த இயந்திரம் தீவனப் பயிர்களை துண்டு துண்டாக வெட்டி, மாடுகள் சாப்பிடும் வகையில் தரும். அதன் பிறகு, மாடுகள் எந்தவித சிரமுமின்றி, அவைகளை சாப்பிடும்; கடினமாக அசைப்போட்டு சாப்பிடுவது தவிர்க்கப்படும்.

பசுந்தீவன சோளம், கோ-3, கோ-4 கலப்பு தீவன புல்களின் அறுவடை பணிக்கு, அரசின் மானிய உதவி கொடுத்து வருகிறோம். கடந்தாண்டு, 100 விவசாயிகளுக்கு, பசும்புல் தீவனப் பயிர்களை அறுவடை செய்வதற்குரிய இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் விலை, 17, ஆயிரத்து 400 ரூபாய். இதில், 75 சதவீதம் மானியமாக இருப்பதால், விவசாயிகள், 4,350 ரூபாய் செலுத்தி, இயந்திரத்தை வாங்கிச் செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us