தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காய்கறி கொள்முதல் மானியம் வழங்கவில்லை சத்துணவு பணியாளர் திண்டாட்டம்

காய்கறி கொள்முதல் மானியம் வழங்கவில்லை சத்துணவு பணியாளர் திண்டாட்டம்

காய்கறி கொள்முதல் மானியம் வழங்கவில்லை சத்துணவு பணியாளர் திண்டாட்டம்


ADDED : செப் 23, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்டத்தில், 1,790க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. தினமும் அவித்த முட்டையுடன் காய்கறி பிரியாணி, கீரை சாதம், சுண்டல், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், மசாலா, மிளகு முட்டை, வறுத்த உருளை கிழங்கு உள்ளிட்டவை பரிமாறப்படுகின்றன.

தொடப்பள்ளி மாணவருக்கு தினமும், 50 கிராம் காய்கறி, நடுநிலைப்பள்ளி மாணவருக்கு, 60 கிராம் காய்கறி வழங்கப்படுகிறது. சத்துணவு மைய அமைப்பாளர்கள், தினசரி காய்கறி, மளிகை பொருட்களை உள்ளூர் சந்தையில் புதிதாக கொள்முதல் செய்து பயன்படுத்துகின்றனர். காய்கறி மற்றும் மளிகை பொருட்களுக்கு செலவிடப்பட்ட தொகை, 3 மாதங்களுக்கு ஒரு முறை, ஒன்றியங்கள் மூலம் சம்மந்தப்பட்ட சத்துணவு மைய அமைப்பாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதுகுறித்து, சத்துணவு பணியாளர்கள் கூறியதாவது:

சத்துணவு காலி பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளதால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் கூடுதலாக, 3 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4 மையங்களுக்கான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்ய, வட்டிக்கு கடன் வாங்கி செலவிட்டுள்ளோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய மானியத்தொகை, கடந்த ஏப்ரல் முதல் வழங்கவில்லை. ஒவ்வொரு பணியாளர்களுக்கு தலா, 40,000 முதல், 60,000 ரூபாய் வரை கடனாளியாக உள்ளோம். இதில் சம்பளத்தையும் போட்டுள்ளதால், கை செலவுக்கு கூட பணமின்றி திண்டாடி வருகிறோம். மானிய தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'இதுவரை வழங்க வேண்டிய காய்கறி மானிய தொகை விபரம் குறித்த பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மானிய தொகை வந்து விடும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us