/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் திருட்டில் 'நோனியா' கும்பல்:தமிழகத்தில் மேலும் 100 பேர் பதுங்கல்
/
மொபைல் திருட்டில் 'நோனியா' கும்பல்:தமிழகத்தில் மேலும் 100 பேர் பதுங்கல்
மொபைல் திருட்டில் 'நோனியா' கும்பல்:தமிழகத்தில் மேலும் 100 பேர் பதுங்கல்
மொபைல் திருட்டில் 'நோனியா' கும்பல்:தமிழகத்தில் மேலும் 100 பேர் பதுங்கல்
ADDED : செப் 28, 2025 02:31 AM
சேலம்;மொபைல் போன் திருட்டில், ஜார்க்கண்ட்டை சேர்ந்த, 'நோனியா' கும்பல் ஈடுபட்டு வருவதும், அதில் மேலும், 100 பேர் தமிழகத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் அடுத்தடுத்து பயணியர் இடையே மொபைல் போன்கள் திருட்டு போனது. இதை கண்டுபிடிக்க, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சவுரவ்குமார் தனிப்படை அமைத்தார். அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சூரஜ்குமார், ஷிவக்குமார், ரஜத் மக்டோ, ராகுல்ேஷக் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்து, 60 மொபைல் போன்களை மீட்டனர். போலீசார் விசாரணையில், அவர்கள், 'நோனியா' கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை போன்று, மேலும் பலர் தமிழகத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜார்க்கண்ட்டில் திரு ட்டில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டவர்களை, 'நோனியா' கொள்ளை கும்பல் என்பர். அக்கும்பலை சேர்ந்தோர், தமிழகத்தில் பதுங்கி மொபைல் போன், பணம், நகை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும், பாதிக்கும் மேல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில், 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது கூட்டாளிகளான மேலும், 20 பேரை தேடுகிறோம். தவிர, அவர்களை போன்று, 100க்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடி, 50 முதல், 100 வரை சேர்ந்த பின், வடமாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.