/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வட மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை கூடாது'
/
'வட மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை கூடாது'
ADDED : செப் 28, 2025 02:34 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசலில், கொ.ம.தே.க., ஆட்சி மன்ற குழு கூட்டம், நேற்று நடந்தது. அக்கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:வரும், 2026 சட்ட சபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். தேர்தல் நேரத்தில், தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
த.வெ.க.,வுக்கு, ஊடகங்கள் தான் ஆதரவு தெரிவிக்கின்றன. அக்கட்சிக்கு ஓட்டுகள் வரும்; மிகப்பெரிய அளவில் ஓட்டு இருக்காது.விஜய் பிரசாரத்தில் தவறான தகவல் எழுதி கொடுக்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான், இத்தேர்தலில் போட்டி இருக்கும். மாற்றத்தை விரும்புபவர்கள், புது வாக்காளர்கள், 10 சதவீத அளவுக்கு, புது கட்சிகளுக்கு செல்வது வழக்கம். தமிழகத்தில் பிழைப்பு தேடி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது. அவரவர் மாநிலத்தில் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.