/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
27 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' : மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுரை
/
27 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' : மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுரை
27 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' : மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுரை
27 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' : மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுரை
ADDED : மே 08, 2024 04:46 AM
ஆத்துார் : ஆத்துார் வட்டார போக்குவரத்து துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாக்களில், 120 தனியார் பள்ளிகளில், 534 பஸ், வேன்கள் உள்ளன. நேற்று தலைவாசல் தனியார் கல்லுாரி வளாகத்துக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி(வருவாய்) தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, டி.எஸ்.பி., சதீஷ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், பள்ளி கல்வி அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, படிக்கட்டு, அவசர கால கதவு உள்பட, 21 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள், '108' அவசரகால ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர், மீட்பு பணிகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.இதுகுறித்து ரகுபதி கூறியதாவது:
தற்போது, 477 வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வந்தனர். இதில், 27 வாகனங்களில் அவசர கால கதவு பராமரிப்பின்மை, இருக்கை சேதம், தீயணைப்பு கருவி போன்றவை இல்லாதது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்கள் தகுதி இழப்பு செய்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இவற்றை சரிசெய்து ஓரிரு நாளில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

