/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிப்பு
/
முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : அக் 27, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தீபாவளியை முன்னிட்டு, முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்., 30, 31, நவ., 3 அதிகாலை, 4:55க்கு புறப்பட்டு சங்ககிரி, சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியே காலை, 11:55க்கு சென்னையை அடையும். சேலத்துக்கு காலை, 6:02க்கு வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், அதே நாட்களில் மதியம், 2:45க்கு கிளம்பி இரவு, 9:15க்கு ஈரோடு வந்து சேரும். சேலத்துக்கு இரவு, 7:56க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.