/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3ம் பருவ பயிற்சி
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3ம் பருவ பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3ம் பருவ பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3ம் பருவ பயிற்சி
ADDED : ஜன 08, 2025 07:02 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வள மையத்தில், வட்டார அளவில் அரசு தொடக்கப்பள்ளியில், 1 முதல், 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 108 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, பொறுமை கடைப்பிடித்தல், மனதை ஒருநிலைப்படுத்தல், எளிய முறையில் பாடங்களை எழுத்து, செயல் வடிவில் கற்பித்தல் உள்ளிட்டவை குறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், மாநில பயிற்சி வகுப்பில் பங்கேற்ற கருத்தாளர்கள், பயிற்சி அளித்தனர். இன்று, நாளை அரசு பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.
அதேபோல் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில், 6 முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தேன்சிட்டு, பொது அறிவு, சமகால நிகழ்வுகள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், 220 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் இரு இடங்களை பிடிக்கும் அணி மாணவர்கள், மாவட்ட வினாடி - வினா போட்டிக்கு தகுதி பெறுவர்.