ADDED : மார் 30, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
சேலம்:காடையாம்பட்டியை
சேர்ந்த சரவணன் மனைவி லலிதா, 48. இவரது மகள் சந்தியா, 30. இவர் சேலம்
புது பஸ் ஸ்டாண்டு அருகே, பிருந்தாவன் சாலையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் செவிலியையாக பணியாற்றுகிறார். அங்குள்ள
மருத்துவமனை விடுதியில் தங்கி பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம்
வேலைக்கு சென்ற அவர், மீண்டும் விடுதிக்கு வரவில்லை. இதுகுறித்து சக
பணியாளர்கள் தகவல்படி, லலிதா பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.
கண்டுபிடிக்க முடியாததால், லலிதா நேற்று முன்தினம் அளித்த
புகார்படி, அழகாபு ரம் போலீசார் தேடுகின்றனர்.
