/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'
/
'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'
'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'
'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'
ADDED : நவ 13, 2024 03:39 AM
சேலம்:சேலம்
புது பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட
அதிகாரிகள், போலீசார் உதவியுடன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது
அங்கு கடை வைத்துள்ளவர்கள், அவர்களுக்கு ஒதுக்கிய அளவை விட,
நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருந்தனர். இதனால் அந்த
பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பயன்படுத்திய காஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பை, டம்ளர்
உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு லாரிகளில்
ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து ரஞ்ஜீத்சிங் கூறியதாவது:
புது
பஸ் ஸ்டாண்டில், 150 கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் உரிமம்
வழங்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆக்கிரமிப்பு செய்த
கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நடைபாதையை
பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். இரவில் ஆதரவற்றோர்
உள்பட பலர் படுத்து உறங்குகின்றனர். அதை தடுக்க, 3 காவலாளிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற முதியவர்களை இல்லங்களுக்கு
அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.