/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு சங்க கடன் நிலுவை சிறப்பு தீர்வு திட்டத்தில் சலுகை
/
கூட்டுறவு சங்க கடன் நிலுவை சிறப்பு தீர்வு திட்டத்தில் சலுகை
கூட்டுறவு சங்க கடன் நிலுவை சிறப்பு தீர்வு திட்டத்தில் சலுகை
கூட்டுறவு சங்க கடன் நிலுவை சிறப்பு தீர்வு திட்டத்தில் சலுகை
ADDED : பிப் 15, 2024 10:16 AM
சேலம்: கூட்டுறவு சங்கங்களில் கடன் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கடன்தாரர்கள் நீண்ட நாட்களாக செலுத்த தவறிய பண்ணைசாரா கடன்கள், இதர நீண்ட கால கடன் நிலுவைகளை, 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம். கடன்களுக்கு கூடுதல் வட்டி, அபராதம், இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதனால் அரசு அறிவித்துள்ள இச்சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முடிந்து தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணை சாரா கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இதில் பயன்பெற, செலுத்த வேண்டிய கடன் நிலுவையில், 25 சதவீத தொகையை, வரும் மார்ச், 12க்குள், கடன் பெற்றுள்ள கூட்டுறவு சங்கம் அல்லது வங்கியில் செலுத்த வேண்டும். பின் ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதி தொகையை ஒப்பந்தம் மேற்கொண்ட நாளில் இருந்து, 6 மாதங்களில் செலுத்த வேண்டும்.

