/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராஜகணபதி கோவிலில் ரூ.14 லட்சம் காணிக்கை
/
ராஜகணபதி கோவிலில் ரூ.14 லட்சம் காணிக்கை
ADDED : நவ 19, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியலில், 14 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
சேலம், ராஜகணபதி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்த கோவிலில் கடந்த ஆக., 29ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில், நேற்று கோவிலில் உள்ள நான்கு உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. தர்மபுரி உதவி ஆணையர் மகாவிஷ்ணு தலை-மையில், சேலம் ராஜகணபதி கோவில் உதவி ஆணையர் ராஜா முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். நான்கு உண்டியல்களிலும், 15 லட்-சத்து, 7,000 ரூபாய், 200 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.